தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய் தமிழில் இவருக்கு மிகப்பெரிய மார்க்கெட் இருக்கிறது ஆனால் தற்பொழுது அதையும் தாண்டி மற்ற இடங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் அதில் முதலாவதாக தெலுங்கு பக்கத்தில் தனது மார்க்கெட்டை பிடிக்க தெலுங்கு இயக்குனர் வம்சியுடன்..
முதல் முறையாக கூட்டணி அமைத்து தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, யோகி பாபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து உள்ளனர்..
இந்த படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக வெளியாக இருக்கிறது. அதற்கு முன்பாக மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்திழுக்க படக்குழு அடுத்தடுத்த அப்டேட்களை கொடுத்து வருகிறது இருப்பினும் ரசிகர்கள் டீசர் மற்றும் ட்ரெய்லரை பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் வாரிசு படத்துக்கு புதிய சிக்கல் உண்டாகி இருக்கிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. தற்பொழுது தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் சங்கமான TFPC ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது அதில் சிவகராந்தி (பொங்கல் ) ரிலீசில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும்..
மிச்சம் மீதி தியேட்டர்கள் தான் டப்பிங் படங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு இருக்கிறது. இதனால் வாரிசு படக்குழு ஆந்திரா மற்றும் தெலுங்கானா போன்ற இடங்களில் திரையரங்கு கிடைப்பதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இதனால் வாரிசு படத்தின் வசூல் அங்கு குறைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.