சினிமா உலகைப் பொறுத்த வரை யார் வேண்டுமானாலும் ஹீரோவாக அவதாரம் எடுக்க முடியும் அதற்கு திறமை இருந்தால் போதும். அந்த வகையில் பல இளம் வாரிசு நடிகர்கள், புதுமுகங்ககள் பலரும் எடுத்தவுடனேயே ஹீரோவாக நடிக்கின்றனர். அதுபோலவே தான் ஹீரோவாக என்ட்ரி ஆனவர் உதயநிதி ஸ்டாலின்.
தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அவவபோது அரசியலில் ஈடுபட்டு வந்தார் அந்த வகையில் தற்போது சேப்பாக்கம் எம்எல்ஏவாக இருக்கிறார் இவரது அப்பா மு க ஸ்டாலின் முதலமைச்சராக தற்போது பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல், சினிமா இரண்டிலும் வெற்றிகண்டு வருவதால் தற்போது தொடமுடியாத உச்சத்தை உதயநிதி ஸ்டாலின் எட்டியுள்ளார்.
இவர் மகிழ்திருமேனி இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் அதுபோல மாரிசெல்வராஜ் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க இருக்கிறார். மேலும் இந்தியில் சூப்பர் ஹிட் அடித்த article 15 என்ற படம் தமிழில் ரீமேக் செய்ய உள்ளது அதில் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலின் நடிக்க்யுள்ளார் என்ற தகவலும் வெளியாகி வருகின்றன.
இப்படி அடுத்தடுத்த சிறந்த இயக்குனர்களை தன்வசப்படுத்தி இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் வைகை புயல் வடிவேலு சமீபத்தில் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நிலையில் திடீரென உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நேரில் சந்தித்து பேசினார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் கூட இணையதள பக்கத்தில் தீயை பருகியது இதுகுறித்து பார்க்கையில் மரியாதை நிமிர்த்தம் காரணமாக சந்தித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் உண்மையில் என்னவென்றால் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். அதில் காமெடி வேடத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது அதன் காரணமாக கூட வடிவேலு உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இனி வடிவேலுக்கு சினிமாவுலகில் ஏறுமுகம்தான். எடுத்த உடனே டாப் நடிகர்களை தன்வசப்படுத்தி இருப்பது மற்றும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை குவித்து வைத்திருக்கிறார் வடிவேலு.