“மாநாடு” திரைப்படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்த சிம்பு அது எங்கு தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்

simbu

சமீபகாலமாக நடிகர் சிம்பு உடம்பையும், எண்ணங்களையும் மாற்றிக்கொண்டு தற்பொழுது சினிமா உலகில் புதிய அவதாரம் எடுத்து தொடர்ந்து நடித்து வருகிறார். கடைசியாக கூட நடிகர் சிம்பு வெங்கட் பிரபுவுடன் இணைந்து மாநாடு என்னும் டைம் லூப் திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

இந்த படத்தின் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் சரியாக அவர் கொடுத்திருந்ததால் இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்குகிறது. இதுவரை மாநாடு திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி அசத்தி உள்ளது சிம்பு கேரியரில் முதல் 100 கோடியை தொட்ட திரைப்படமாக மாநாடு திரைப்படம் உருமாறியுள்ளது.

இதனால் அவர் செம சந்தோஷத்தில் இருக்கிறார் மேலும் அடுத்தடுத்த படங்களிலும் உற்சாகமாக நடித்து வருகிறார் அந்த வகையில் இவரது கையில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார் இந்த படத்தின் ஷூட்டிங் முடிய இன்னும் சில நாட்களே இருப்பதாக கூறப்படுகிறது.

அதை தொடர்ந்து நடிகர் சிம்பு பத்து தல, கொரோனா குமார் போன்ற பல்வேறு திரை படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். இது போதாத குறைக்கு நடிகர் சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.  இந்த நிகழ்ச்சிக்காக அவர் மிகப்பெரிய ஒரு தொகையை வங்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் இன்னொரு செய்தியையும் வெளிவந்து உள்ளது.

அதாவது நடிகர் சிம்பு நடிப்பில் உருவான மாநாடு திரைப்படம் 100வது நாளை தாண்டி  வெற்றி கரமாக போய்க்கொண்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து நடிகர் சிம்புவும் திரையரங்கிற்கு வந்துள்ளார். ரசிகர்களின் பேவரைட் திரையரங்கமான ரோகிணி திரையரங்கிற்கு வந்து ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை பார்த்துள்ளார் மேலும் ரசிகர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இதோ அந்த அழகிய புகைப்படம்.

simbu
simbu