பொன்னியின் செல்வன் படத்தில் உன்னுடைய நடிப்பு பிரமாதம்..! பிரபல நடிகரை நேரில் சந்தித்து பேசிய சூப்பர் ஸ்டார்..!

rajini
rajini

தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோவாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தனது 169 திரைப்படமான ஜெயிலர் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். தனது படத்தில் நடித்துக் கொண்டிருந்தாலும் நல்ல படங்கள் வந்தால் அதை பார்த்து கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல் சிறப்பாக நடித்த நடிகர்களின் நேரில் வரவழித்து அவர்களை வாழ்த்தி பேசுவது வழக்கம்..

அந்த வகையில் அண்மைக்காலமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து செய்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தைப் பார்த்துவிட்டு ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யாராய் போன்ற நடிகர்களை வாழ்த்தினார் அவர்களை தொடர்ந்து..

தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டையராக நடித்த நடிகர் சரத்குமாரை நேரில் சந்தித்து பேசுகிறார். இது குறித்து நடிகர் சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் தெளிவாக கூறியுள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது என்னவென்றால் அன்பு நண்பர் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டையர்..

கதாபாத்திரம் ஏற்று நடித்த என்னை அலைபேசியில் அழைத்து ஆத்மார்த்தமாக பாராட்டியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்றைய தினம் அவரை நேரில் சந்திப்பில் இனிய தினமாக நான் துவங்கியது எனது பணிகள் மகள் வரலட்சுமி பணிகள் திரை வளர்ச்சி மற்றும் பொதுவான கருத்துக்களை பகிர்ந்து காபியுடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீண்ட உரையாடல் இருவருக்கும்..

இடையான நட்பினை எண்ணி திகழ்கிறேன் என பதிவிட்டுள்ளார் மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சரத்குமார் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்தார். அது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்பொழுது வைரல் ஆகி வருகிறது இதோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சரத்குமார் எடுத்துக் கொண்ட அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..