தளபதி விஜய் தற்போது நெல்சன் திலிப்குமார் உடன் முதல் முறையாக கைகோர்த்து பீஸ்ட் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தான் வெளிவரும் என கணிக்கப்பட்டுள்ளது.
பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது இதுவரை 75% படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பை நோக்கி நகர்ந்து உள்ளது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கியுள்ளதாக ஒரு சில செய்திகள் கசிந்த வண்ணம் இருக்கின்றனர்.
இது போதாத குறைக்கு சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அவ்வப்போது நடிகர், நடிகைகள் புகைப்படங்கள், வீடியோகள் ஆகியவை மறைமுகமாக வெளியிட்டு தான் வருகின்றன மேலும் விஜய் மாலில் ரத்தம் சொட்ட பீஸ்ட் படத்தில் இருக்கும் காட்சிகள் தீயாய் பரவி வருகிறது. இந்த படத்தில் விஜயுடன் இணைந்து தெலுங்கு நடிகையான பூஜா ஹெக்டே மற்றும் மலையாள நடிகையான அபர்ணா தாஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் மற்றும் காமெடியனாக யோகிபாபு இந்த திரைப்படத்தில் நடித்து அசத்தி வருகிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் இருந்து ஒவ்வொருவரின் கதாபாத்திரம் குறித்து தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன அந்த வகையில் பீஸ்ட் படத்தில் மலையாள நடிகை அபர்ணா தாஸ் – க்கு என்ன கதாபாத்திரம் என்று தற்போது தெரியவந்துள்ளது.
இவர் தளபதி விஜயின் தங்கையாக இந்த பீஸ்ட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதை அறிந்த ரசிகர்கள் ஒருவேலை அண்ணன் தங்கையை வைத்து தான் படம் நகர்கிறதா என தற்போது கமெண்ட்டுகள் மூலம் கேள்வியைக் கேட்டு வருகின்றனர்.