பாலிவுட்டில் சர்ச்சைக்கு என பெயர் போன ஒரு நடிகை எந்த பிரச்சனையாக இருந்தாலும் அந்தப் பிரச்சனையில் மூக்கை நுழைத்து சர்ச்சையில் மாட்டி கொள்வார். இதனாலேயே பாலிவுட் சினிமாவில் இவருக்கு அதிக வாய்ப்பு கிடைத்தது.
மேலும் பாலிவட்டில் வாரிசு நடிகைகள் சினிமாவில் நடிக்க ஈசியாக நுழைந்து விடுகிறார்கள் ஆனால் அம்மணி தனது விடாமுயற்சியால் சினிமாவில் ஒரு மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இந்த சர்ச்சை நடிகை நான்கு தேசிய விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னதான் தேசிய விருது நடிகையாக இருந்தாலும் சரியாக பட வாய்ப்பு அமையாததால் எதையாவது பேசி சர்ச்சையில் சிக்கி கொள்வார். தமிழில் ஒரு முன்னணி நடிகருடன் ஒரு படத்தில் நடித்தார் ஆனால் இந்த படம் சரியாக ஓடவில்லை. அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்பும் சரி வர கிடைக்கவில்லை.
இதை அடுத்து அம்மனி நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் பான் இந்திய திரைப்படமாக வெளியானது. இந்த படமும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனால் அந்த சர்ச்சை நடிகை கோலிவுட் நமக்கு செட் ஆகாது என்று எண்ணி திரும்பவும் பாலிவுட் பக்கமே சென்று விட்டார்.
இதை அடுத்து அந்த தேசிய விருது நடிகை கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேங்ஸ்டர் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த திரைப்படமும் படும் மோசமான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை நம்பி தயாரிப்பாளர் கிட்டத்தட்ட 100 கோடி வரை செலவு செய்துள்ளார் ஆனால் இந்த படம் வெறும் 4 கோடி தான் வசூல் செய்தது.
இந்த படத்தை நம்பி மோசம் போன அந்த தயாரிப்பாளர் தற்போது நடுத்தெருவில் நிற்கிறார். ஆனால் இந்த தயாரிப்பாளருக்கு ஆறுதல் சொல்லாமல் அம்மணி அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டாராம். இதனால் அந்த சர்ச்சை நடிகையை கலாய்த்து பல்வேறு விதமான மீம்ஸ்களை போட்டு வருகின்றனர்.