பல்லு போன வயதில் ஹீரோயினாக ரீ என்ட்ரி கொடுக்கும் குக் வித் கோமாளி பிரபலம்.!

rekha

பொதுவாக சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் என்றால் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே அவர்களால் தொடர்ந்து முன்னணி நடிகையாக திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் வயதாக தொடங்கி விட்டால் ரசிகர்கள் மத்தியில் அவர்களுக்கென இருந்த மார்க்கெட் குறைந்து விடுவதனால் சைடு கேரக்டரில் நடித்து வரும் பல நடிகைகள் உள்ளார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகியாக பிரபல நடிகை நடிக்க இருக்கும் நிலையில் அது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கடலோர கவிதைகள் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகை ரேகா. இதன் மூலம் அறிமுகமான நடிகை ரேகா 80, 90 காலகட்டத்தில் ஏராளமான திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

இவ்வாறு தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்த பிரபலமானார்.இவ்வாறு ஒரு கட்டத்திற்கு பிறகு வயதான காரணத்தினால் திரைப்படங்களில் நடிப்பதற்காக வாய்ப்பு இழந்த நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குப் பெற்றார்.

மேலும் இதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் தொடர்ந்து சின்னத்திரை நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று வருகிறார். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் பிறகு காணும் காலங்கள் சீரியலில் நடித்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தினை மாலதி நாராயணன் இயக்க இருக்கும் நிலையில் மாரியம்மா என இந்த படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

rekha 1
rekha 1

இந்த படத்திற்கு ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ஏ ஆர் ரஹைனா இசையமைக்க இருக்கிறார். பெண்களை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது மேலும் இந்த படத்தினை 72 ஃபிலிம்ஸ் என்ற படம் நிறுவனம் சார்பில் மாலதி நாராயணன் தயாரிக்கிறார்.