காமெடி நடிகராக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது சோசியல் மீடியாவில் அலப்பறை செய்து வருபவர் தான் கூல் சுரேஷ் இவர் தொடர்ந்து பல புதிய திரைப்படங்களை பார்த்துவிட்டு விமர்சனம் கூறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் படம் பார்த்து விட்டு வந்த பெண்ணிடம் கூல் சுரேஷ் முத்தம் கேட்டு தொல்லை செய்திருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இன்று பகாசூரன் மற்றும் வாத்தி இரண்டு திரைப்படங்களையும் கூல் சுரேஷ் பார்த்திருக்கும் நிலையில் இந்த படத்தில் கூல் சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படம் குறித்து பேசிய கூல் சுரேஷ் இது என்னுடைய நூறாவது படம் என்றும் என்னுடைய நூறாவது படமாக இந்த படம் அமைந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி எனவும் கூறினார்.
இப்படிப்பட்ட நிலையில் இவர் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு பெண் படம் பார்த்து விட்டு வந்த நிலையில் அந்த பெண்ணை அழைத்து அவரின் தோள் மீது கையை போட்டுக்கொண்டு இது உங்களைப் போன்ற பெண்களுக்கான படம் தான் இந்த படத்தை பார்த்து நீங்கள் எல்லாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற அந்த பெண்ணிற்கு அட்வைஸ் செய்தார்.
உடனே சில நாட்களுக்கு முன்னால் நான் எல்லா நடிகைகளுக்கும் முத்தம் கொடுத்திருக்கிறேன் என்று அனைவரும் என்னை கேட்டு வருகிறார்கள் இப்பொழுது பாருங்கள் இது என்னுடைய தங்கைதான் என்று கூறிய கூல் சுரேஷ் அந்த பெண்ணிற்கு முத்தம் கொடுக்குமாறு கூறுகிறார். ஆனால் அந்த பெண் சார் விட்டுடுங்க சார் விட்டுடுங்க சார் என்று அவரிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறார். சுரேஷ் எவ்வளவு கேட்டாலும் முத்தம் கொடுக்க அந்த பெண் மறுத்ததன் காரணமாக உடனே கூல் சுரேஷ் அது என்னுடைய தங்கை மாதிரி தான் அதனால்தான் கேட்டேன் எனக் கூறுகிறார்.
மேலும் இந்த படத்தைப் பார்த்த காரணத்தினால் தான் அவர் தற்பொழுது உஷாராக இருப்பதாகவும் மழுப்பி பேசினார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக இதற்கு முன்பு நான் கடவுள் இல்லை என்ற திரைப்படம் வெளியான நிலையில்விமர்சனம் தரும்பொழுது திடீரென பக்கத்தில் இருந்த சாக்ஷி அகர்வாலுக்கு முத்தம் கொடுத்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது இவ்வாறு தொடர்ந்த செய்து வருவது ரசிகர்கள் மத்தியில் கடுப்பினை ஏற்படுத்தி உள்ளது.