சில மாதங்களுக்கு முன்பு பிரபல ஊடகம் ஒன்று இருக்கு பேட்டியளித்த மாளவிகா மோகனன் நயன்தாரா நடித்திருந்த கதாபாத்திரம் ஒன்றினை மறைமுகமாக கேலி செய்திருந்தார் எனவே இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நயன்தாரா பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது மீண்டும் மாளவிகா மோகன் லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. மேலும் ஹீரோக்களாக அளவிற்கு சினிமாவில் சம்பளம் வாங்கும் ஒரே நடிகை. நடிகர்கள் மட்டுமல்லாமல் நடிகைகள் படமும் மத்தியில் நல்ல வரவேற்பினை பெறும் என்பதை நிரூபித்துக் காட்டினார் அந்த வகையில் தொடர்ந்து நயன்தாரா தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
நயன்தாரா நடிப்பில் இறுதியில் வெளியான கனெக்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு இருக்கு வெற்றியை பெற்றது. எனவே இந்த படத்தின் ரிலீஸ் இருக்கும் முன்பு ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் பல விமர்சனங்களுக்கு பதில் அளித்திருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ராஜா ராணி படத்தில் தான் நடித்த ஹாஸ்பிடல் காட்சியை மறைமுகமாக கேலி செய்தார் ஒரு நடிகை ஹாஸ்பிடல் என்றால் தலையை விரித்துக் கொண்டு அலங்கோலமாக போக வேண்டி என்ற அவசியம் இல்லை என்பதனை கூறினார் நயன்தாரா.
இதற்கு முன்பு மாளவிகா மோகனனிடம் தமிழ் சினிமாவில் வேடிக்கையான லாஜிக் பற்றி சொல்லுங்கள் என்று கேள்வி கேட்டனர் அதற்கு பதில் அளித்த மாளவிகா மோகன் நான் உண்மையில் பெரிய சூப்பர் ஸ்டார் நடிகையை எப்படி பார்த்து இருக்கிறேன் ஒரு மருத்துவமனை காட்சியில் அவர்கிட்ட இருந்த நிலையில் அங்கு முழு மேக்கப்பில் கண் லைனர், அழகான முடி, லிப்ஸ்டிக் என்று இருப்பதை பார்க்க வேடிக்கையாக இருந்ததை கூறினார்.
ரசிகர்களும் மாளவிகா மோகனனை விமர்சனம் செய்த நிலையில் சமீப பேட்டி ஒன்றில் பங்கேற்றம் மாளவிகா மோகனன் லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசி உள்ளார் மீண்டும் நயன்தாராவை சீண்டி இருப்பது ரசிகர்கள் மத்தியில் கடுப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தில் எனக்கு சுத்தமாக விருப்பமில்லை நடிகர்களைப் போல நடிகைகளுக்கும் சூப்பர் ஸ்டார் என்று தான் அழைக்கப்பட வேண்டும்.
இதில் லேடி சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிடுவது அவசியம் இல்லை. தீபிகா படுகோன், ஆலியா பட், கத்ரீனா கைஃப் போன்றவர்களை நாம் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதில்லை அவர்களை எல்லாம் சூப்பர் ஸ்டார் என்று தான் அழைக்கிறோம் என்று கூறியுள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் என நயன்தாராவை அழைக்கப்படும் நிலையில் இந்த பெயரை மட்டும் கூறாமல் மாளவிகா மோகனன் கேலி செய்து பேசி உள்ளார்.
There Is No Lady Super Star #Malavikamohanan pic.twitter.com/3aKLdUK0ER
— chettyrajubhai (@chettyrajubhai) February 11, 2023