நடிகர் அஜித்குமார் ஹச் வினோத்துடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து நடித்துவரும் திரைப்படம் துணிவு. இந்த படம் அஜித்திற்கு 61வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார் இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரகனி, வீரா, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.
இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு அடுத்ததாக பாங்காங் செல்ல இருக்கிறது. இந்த படத்தை அஜித் வெற்றிகரமாக முடித்துவிட்டு அடுத்ததாக நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்து அஜித் தனது 62 வது திரைப் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில் இந்தப் படத்திற்கான மற்ற நடிகர் நடிகைகளை விக்னேஷ் சிவன் தேர்வு செய்து வருகிறார் அப்படி சமீபத்திய பேட்டி ஒன்றில் கௌதம் மேனன் வெளிப்படையாக அஜித்தின் படத்தில் நான் நடிக்கிறேன். வில்லன் கதாபாத்திரத்தில் என வெளிப்படையாக பேசிவிட்டார். இதனால் ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர் ஏனென்றால் கௌதம் மேனன் .
அண்மைக்காலமாக இயக்குனர் என்ற அந்தஸ்தையும் தாண்டி ஹீரோவாக சூப்பராக நடித்து அசத்துகிறார் குறிப்பாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் இருந்தது அதனை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தில் கௌதம மேனன் நடிக்க இருக்கிறேன் என கூறி உள்ளார் ஆனால் எந்த மாதிரியான கதாபாத்திரம் என்று தெரியவில்லை வில்லன் ரோல் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என சொல்லியுள்ளார்.
இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை அறிந்த ரசிகர்கள் செம்ம சந்தோஷம் அடைந்துள்ளனர். இவரைத் தொடர்ந்து கதைக்கு ஏற்ப முக்கியமான நடிகர் நடிகைகளை விக்னேஷ் சிவன் தட்டி தூக்குவார் என கூறப்படுகிறது. விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தில் நடிகர் அஜித் குமார், கௌதம் மேனன், நயன்தாரா அவர்கள் இணைவது உறுதி.