டாக்டர் திரைப்படம் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகாது.? சனிக்கிழமையில் தான் ரிலீஸ் ஆகும்.! காரணம் இவர் தானாம்.?

doctor
doctor

சின்னத்திரையில் காமெடியனாக அறிமுகமாகி பின் தொகுப்பாளராக விஸ்வரூபம் எடுத்த அவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்தது அதன் விளைவாகவே இவருக்கு வெள்ளித்திரையில் பட வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தன. அந்த வகையில் மெரினா என்னும் திரைப்படத்தில் நடித்ததை தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.

அதில் தனது மாறுபட்ட நடிப்பை வெளிக்காட்ட உடல் அமைப்பையும் மாற்றிக் கொண்டு வலம் வந்தார். இவரது நடிப்பு கிட்டத்தட்ட ரஜினியைப் போல இருப்பதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர் ஏனென்றால் ரஜினி ஒரு படத்தில் நடித்தால் அந்த படத்திற்கு ஹீரோவாக நடிப்பதையும் தாண்டி காமெடியிலும் பின்னிப் பெடல் எடுப்பார்.

அதுபோலவே தற்போது சிவகார்த்திகேயனும் நடித்து வருவதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். சிவகார்த்திகேயன் தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். அந்த வகையில் இவர் டாக்டர், டான், அயாலன் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக ரெடியாக இருக்கின்றன.

தற்போது சிவகார்த்திகேயன் நெல்சன் திலிப்குமார் உடன் இணைந்து பணியாற்றிய டாக்டர் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா அருள்மோகன், யோகிபாபு, தொகுப்பாளினி அர்ச்சனா தீபா போன்ற பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஏற்கனவே பட குழு படப்பிடிப்பை முடித்திருந்தாலும்  கொரோனா  தாக்கம் படத்தை வெளியிடாமல் தள்ளிக்கொண்டே போக வைத்தது.

பொறுத்திருந்து பார்த்த படக்குழுவினர் படத்தை ரிலீஸ் செய்யவில்லை என்றால் சரியாக இருக்காது என கூறி படத்தின் தேதியை தற்போது லாக் செய்து உள்ளன.  அதாவது டாக்டர் திரைப்படம் அக்டோபர் 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது ஆயுதபூஜை சில நாட்களுக்கு முன்பு இந்த படம் வெளியாகும் என அறிவித்து விட்டனர். பொதுவாக படங்கள் பெரும்பாலும் வெள்ளிக்கிழமையில் தான் வெளிவரும் என்பது நாம் பார்த்த ஒன்று.

ஆனால் டாக்டர் திரைப்படம் சனிகிழமைக்கு வெளியாகியிருக்கிறது காரணம் தயாரிப்பாளர் கோட்டப்பாடி ராஜேஷின் செண்டிமென்ட் தான் காரணம் என அடித்து கூறப்படுகிறது. எட்டாம் தேதி வெளியாகாது ஒன்பதாம் தேதி தான் தயாரிப்பாளரின் ஆசையான நாள் என்பதால் அந்த தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு தற்போது முடிவெடுத்துள்ளன.