“சூப்பர் ஹீரோ” கதையில் நடிக்கும் சிம்பு.. இயக்குனர் யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்.!

SIMBU
SIMBU

நடிகர் சிம்பு ரீ என்ட்ரி கொடுத்ததிலிருந்து மக்கள் மற்றும் ரசிகர்களை சந்தோஷப்படுத்த நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் அந்த வகையில் மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக வெற்றி கண்டன.

அதனை தொடர்ந்து மற்றொரு ஹிட் படத்தை கொடுக்க சிம்பு நடித்து வரும் திரைப்படம் பத்து தல. இந்த படம் ஒரு ரீமேக் திரைப்படமாக இருந்தாலும். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது காரணம் சிம்பு கதைக்கு ஏற்றவாறு தன்னை முற்றிலுமாக மாற்றிக் கொண்டு சூப்பராக நடிக்க கூடியவர் என்பது தான்..

பத்து தல படத்தில் சிம்புவுடன் கைகோர்த்து கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர், நடிகைகள்  நடித்து வருகின்றனர். இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது. இதை முடித்துவிட்டு அடுத்தடுத்த படங்களில் நடிக்கவும் திட்டம் போட்டு இருக்கிறாராம்.

அந்த வகையில் இயக்குனர் சுதா கொங்காரா ஏற்கனவே ஒரு கதையை சிம்புவிடம் சொல்லி உள்ளார்.  இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் ஒரு சூப்பர் ஹீரோ கதையும் சிம்புவை தேடி வந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தற்பொழுது சிம்புவுக்கு சூப்பர் ஹீரோ கதை ஒன்றை சொல்லி உள்ளார் அது அவருக்கு பிடித்திருந்தாலும் இதுவரை பைனல் பண்ணாமல் இருக்கிறதாம்.

இந்த படம் சம்பந்தமாக ஏ ஆர் முருகதாஸ்சும், சிம்புவும் இரண்டு முறை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது வெகு விரைவிலேயே தெரிந்து விடும் சிம்புவின் அடுத்த படத்தை எடுக்கப் போவது  பிரபல இயக்குனர் சுதா கொங்காரா அல்லது ஏ ஆர் முருகதாஸ் என்று பொறுத்திருந்து பார்ப்போம்..