நடிகர் சிவகார்த்திகேயன் சினிமா உலகில் அடி எடுத்து வைப்பதற்கு முன்பாக சின்னத்திரையில் காமெடியாகவும், தொகுப்பாளராகவும் பணியாற்றி பின் தனது திறமையின் மூலம் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்தார் முதல் படமான மெரினா படம் சுமாரான வெற்றியை பெற்று இருந்தாலும் அதன்பின் இவர் சேர்ந்து நடித்த திரைப்படங்கள் அனைத்துமே நல்லதொரு வெற்றி படங்களாக மாறின.
அந்த வகையில் மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், காக்கிச்சட்டை, ரெமோ, என அடுக்கி கொண்டே நாம் போகலாம் ஏன் கடைசியாக கூட சிவக்கார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் கூட அதிரி புதிரி ஹிட் அடித்ததோடு மட்டுமல்லாமல் 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் சிவகார்த்திகேயன் சினிமா பயணம் உயர்ந்து கொண்டே இருக்கிறது சினிமா உலகில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினாலும் படத்தின் இசையும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடித்த பெரும்பாலான படங்களுக்கு இசை அமைத்து அசத்தியவர் டி. இமான்.
சிவகார்த்திகேயன் படங்களில் டி இமான் இசையமைத்த படங்கள் அனைத்துமே நல்லதொரு வெற்றியை ருசித்தது அதுமட்டுமல்லாமல் அந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன அந்த வகையில் டி இமான் இதுவரை சீமராஜா, நம்மவீட்டுபிள்ளை, ரஜினிமுருகன் ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் இசையமைப்பாளர் டி. இமான்னுக்கும், சிவகார்த்திகேயனும் நல்ல நண்பர்கள் ஆனார்கள். இனிமேல் இவர்கள் கூட்டணியில் பெரிய அளவில் நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் அனிருத் தனது படத்துக்கு இசையமைக்க வைத்து அழகு பார்த்தார் அவரும் சிறப்பாக இசையமைத்த தான் காரணமாக தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் படங்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இதனால் டி இமானை பெரிய அளவில் கண்டு கொள்வதே இல்லையாம் நடிகர் சிவகார்த்திகேயன். இசையமைப்பாளர் இமான் சற்று வருத்தத்தில் தான் இருந்து வருகிறார் இதற்கு காரணம் சிவகார்த்திகேயனும், அனிருத்தும் நெருங்கி பழகுவது மற்றும் படங்களில் கமீட்டாகுவது தான் காரணம் என கூறப்படுகிறது.
சமீபத்தில் டி. இமான் பிறந்தநாளுக்கு சிவகார்த்திகேயன் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி நாளும் மறுநாள்தான் டி. இமான் மறுநாள் நன்றி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இதைவைத்து பார்க்கும் போதே தெரிகிறது இருவருக்கும் இடையே சிறு வருத்தம் இருப்பது தெள்ளத் தெளிவாகவே தெரிகிறது.