நடிகர் சிவகார்த்திகேயன் சினிமா உலகில் முதலில் காமெடி ஹீரோவாகத்தான் பார்க்கப்பட்டார் ஆனால் ஓரிரு திரைப்படங்களுக்கு பிறகு தன்னை முற்றிலுமாக மாற்றிக் கொண்டு மக்கள் மற்றும் சினிமா பிரபலங்களை கவர்ந்திழுக்கும் வகையில் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
மெரினா மனம் கொத்தி பறவை ஆகிய திரைப்படங்களுக்கு பின் இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்த காரணத்தினால் குறைந்த படங்களிலேயே முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார். கடைசியாக கூட இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூல் சாதனை அள்ளி சிவகார்த்திகேயன் கேரியரில் இந்த திரைப்படமே மிகப்பெரிய ஒரு படமாக அமைந்தது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் டான், அயலான் போன்ற படங்களில் நடித்து வருகிறார் இந்த திரைப்படங்களும் வெகு விரைவிலேயே வெளிவர காத்திருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 20-வது திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் என்பவர் இயக்க இருக்கிறார்.
இந்த படத்திற்கு முதலில் நடிகைகளை தேடி வந்த நிலையில் ஒருவழியாக அவர்களையும் கண்டுபிடித்து உள்ளது இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது மேலும் இந்த படத்தில் இன்னொரு நாயகியும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது ஆகமொத்தம் எஸ் கே 20 படத்தில் இரண்டு நாயகிகள் என்பதே கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
இந்த படம் முழுக்க முழுக்க டூரிஸ்ட் சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என்பதால் இதுவரை பார்க்காத ஒரு சிவகார்த்திகேயனை பார்க்க முடியும் மேலும் இந்த திரைப்படத்தில் காமெடியும் சென்டிமென்ட் சீன்கள் நிறைய இருக்கும் என தெரியவந்துள்ளது. சும்மாவே சிவகார்த்திகேயன் மிரட்டுவார் இப்படி ஒரு படம் கிடைத்தால் அல்வா துண்டு போல.. செய்யும் இந்த திரைப்படம் ஒரு ஹிட் படம் அவருக்கு எடுத்து வைத்துக் கொள்ளலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.