சிம்பு நடிக்கும் “வெந்து தணிந்தது காடு” படத்தின் ஷூட்டிங் எங்கு நடக்கிறது தெரியுமா.?

simbu
simbu

சமீப ஆண்டுகளாக திரையுலகில் புதுமுக நடிகர்கள் வரவேற்பு அதிகரித்து உள்ளது இதனால் பல நல்ல படங்கள் இளம் நடிகர்களுக்கு செல்வதால் டாப் ஹீரோக்கள் நல்ல பட வாய்ப்புகள் இல்லாமல் அல்லாடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மேலும் இளம் தலைமுறை நடிகர்கள் பலரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதால் தற்போது இருக்கின்ற முன்னணி ஹீரோக்கள் அவர்களை ஒரு மடங்கு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

மட்டுமே தன்னை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற உருவாகி உள்ளது அதை சரியாக புரிந்து கொண்ட விஜய், அஜித், தனுஷ், ரஜினி, விக்ரம் போன்ற ஜாம்பவான்கள் சரியாக பயணிக்கின்றனர். ஆனால் அதை சரியாக உணராதவர்கள் படவாய்ப்பு இருப்பதோடு காணாமல் போய்விடுகின்றனர்.

இந்த லிஸ்டில் ஒரு சில முன்னணி நடிகர்கள் இருகின்றனர்.  அந்த லிஸ்ட்டில்இருந்து கொஞ்சம் கொஞ்சம் வெளியே வர துடிப்பவர் நடிகர் சிம்பு.  இவர் நடிப்பில் வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற திரைப்படத்தில் உடையை தாறுமாறாக  கூட்டி நடித்ததால் ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் சிம்புவை விமர்சித்தனர் அதன் பிறகுதனது உடல் எடையை பல மடங்கு குறைந்து ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்தார்.

அதன்பிறகு மாநாடு திரைப்படத்தையும் வெற்றிகரமாக முடித்துவிட்டு மூன்றாவது முறையாக இயக்குனர் கௌதம் மேனனுடன் இணைந்து “வெந்து தணிந்தது காடு” என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இந்தப்படத்தின் கதைக்காக நடிகர் சிம்பு 15 கிலோ உடல் எடையை குறைத்து சின்ன பையன் போல் நிற்கும் போஸ்டர் வெளியாகி கொண்டாட வைத்தது. இந்த திரைப்படத்திற்கு முதன் முதலில் “நதிகளிலே நீராடும் சூரியன்” என்ற தலைப்புதான் வைத்தது ஆனால்  பாரதியாரின் நூற்றாண்டை முன்னிட்டு வெந்து தணிந்தது காடு என்ற தலைப்பை வைத்ததாக கௌதம் மேனன் கூறினார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூரில் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு சென்னை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இந்த படம் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இந்த திரைப்படம் நிச்சயம் சிம்புவுக்கு சிறந்த படமாக அமையும்என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.