தமிழ் சினிமா உலகில் ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் தனது அழகு, திறமையின் மூலம் ஹீரோயின் என்ற அந்தஸ்தைப் பெற்றவர் நடிகை திரிஷா. நடிகை திரிஷா ஆரம்பத்திலேயே டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தால் அவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போனது.
மேலும் ரசிகர்களும் அவருக்கு கிடுகிடுவென உயர்ந்தது. இதுவரை நடிகை திரிஷா அஜித், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு போன்றவர்களுடன் நடித்து அசத்தியுள்ளார். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக வலம் வருகிறார். நடிகை த்ரிஷா தற்போது சோலோ மற்றும் டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஒரு படத்திற்கு சுமார் 3 கோடியில் இருந்து 4 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
திரிஷா கடைசியாக மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வெற்றிகரமாக நடித்துள்ளார் அதனை தொடர்ந்து பெயரிடப்படாத ஒரு திரைப் படங்களில் கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது. சினிமாவில் இப்படி ஓடிக்கொண்டு இருந்தாலும் ஆனால் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது அவரது ரசிகர்களை சற்று வருத்தமடைய தான் செய்கிறது.
நடிகை திரிஷா திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என உறுதியாக இருந்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் சினிமாவையும் தாண்டி நடிகை திரிஷா அரசியல் கட்சியில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகை திரிஷா பாஜக அல்லது காங்கிரஸ் இரண்டில் ஏதேனும் ஒரு கட்சியில் அவர் இணைவார் என தெரியவருகிறது இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் எனவும் கூறப்படுகின்றன.