சன்னி லியோன் திரைப்படத்தில் குக் வித் கோமாளி தர்ஷா குப்தாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.!

dharsha gupta
dharsha gupta

தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர்தான் நடிகை சன்னிலியோன். இவர் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இந்திய திரையுலகில் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் இவர் நடிப்பில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் வெளி வந்து கொண்டிருக்கிறது.

அந்தவகையில் தமிழில் நடிகர் ஜெய் நடித்திருந்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய சன்னி லியோன் அடுத்ததாக தமிழ்,ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட இந்தியாவில் பல்வேறு மொழிகளில் தயாராகி வரும் கொட்டேஷன் கேங் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரைத் தொடர்ந்து வீரமாதேவி, அண்ட் ஹெரோ என வரிசையாக தமிழில் பல திரைப்படங்களில் சன்னி லியோன் நடித்து வருகிறார். இவர் ஆரம்பத்தில் கவர்ச்சி நடிகையாக நடித்து வந்தாலும் தற்போது கதை அம்சமுள்ள நல்ல திரைப்படங்களில் நடித்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு உள்ள ஊமை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இத்திரைப்படத்தினை இயக்குனர் ஆர் யுவன் எழுதி இயக்கி வருகிறார் மேலும் இத்திரைப்படத்தில் குக் வித் கோமாளி தார்ஷா குப்தா மற்றும் சதீஷ் போன்றவர்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இவர்களைத் தொடர்ந்து யோகி பாபு ரமேஷ் திலக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.  மேலும் VSU மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் வைட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் போம்மை கோஸ்ட் திரைப்படத்திற்கு தீபக் டி மோகன் ஒளிப்பதிவு படத்தொகுப்பு செய்ய, ஜாவித் ரியாஸ் பாடலுக்கு இசையமைக்க, தரண் குமார் பின்னணி இசை சேர்த்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு ஓமே கோஸ்ட் திரைப்படத்தின் மிரட்டலான போஸ்டர் வெளியாகி பிரபலமானதை தொடர்ந்து தற்போது மற்ற கதாபாத்திரங்களின் போஸ்டரும் வெளியாகி வருகின்றன அந்த வகையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் தர்ஷா குப்தாவின் சௌமியா கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் வகையில் புதிய போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது.