கொரோனா கால கட்டத்திற்கு பின் தொடர்ந்து டாப் நடிகர்களின் திரைப்படங்கள் வெளிவந்து அசத்துகின்றன. ஆனால் அந்த நடிகர்களுக்கு ஏத்தமாதிரி நல்ல படமாக இல்லாதது மக்களை சற்று வருத்தமடைய செய்துள்ளது விஜயின் பீஸ்ட் அஜித்தின் வலிமை போன்ற படங்கள் வெளியாகி நல்ல வசூலை அள்ளி இருந்தாலும் ரசிகர்களின் மனதை பூர்த்தி செய்ததா என்றால் இல்லை..
இவர்களைத் தொடர்ந்து வெளிவந்த சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படமும் சுமாரான வரவேற்பையே பெற்றது. இந்த வருடம் ரஜினியின் எந்த ஒரு படமும் இதுவரை ரிலீசாகாமல் இருந்து வந்துள்ளது. தமிழ் படங்கள் பெரிய அளவில் சொல்லிக்கொள்ளும்படி நல்ல வரவேற்பை பெறவில்லை.
என்றாலும் தெலுங்கு மற்றும் கன்னட படங்கள் வெளிவந்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அடித்து நொறுக்கி உள்ளது குறிப்பாக ராஜமௌலி இயக்கத்தில் உருவான RRR, பிரசாந்த் நில் இயக்கத்தில் உருவான KGF 2 போன்ற படங்கள் ஆயிரம் கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அல்லு அர்ஜுனின் புஷ்பா படமும் நல்ல வசூலை இந்திய அளவில் கண்டது. இப்படி இருக்கின்ற நிலையில் கேரளாவில் ரிலீசான மற்ற மொழி படங்கள் அங்கு நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளதா என்பது குறித்து ஒரு தகவல் கிடைத்துள்ளது. அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.
KGF 2 செம லாபம், RRR – லாபம், புஷ்பா – லாபம், வலிமை – நஷ்டம், பீஸ்ட் – நஷ்டம், டான் – நஷ்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் – நஷ்டம், எதற்கும் துணிந்தவன் நஷ்டம். குறிப்பாக அண்மையில் வந்த தமிழ் திரைப்படங்கள் தான் மலையாளத்தில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.