சின்னத்திரை பிரபல காமெடி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மூலம் உலகமெங்கும் பிரபலமடைந்தவர் புகழ்.இவர் இதற்குமுன் விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிச்சா போச்சு, கலக்கப் போவது யாரு போன்ற பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது காமெடி திறமையை வெளிப்படுத்தி மக்கள் பலரையும் சந்தோஷப்படுத்தி வந்தவர்.
ஆனால் இவருக்கு பெரிய அளவு பேரையும் புகழையும் வாங்கித் தந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.மேலும் இந்த நிகழ்ச்சி மற்றும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல போட்டியாளர்களும் மக்களிடையே பெரிதும் பிரபலமடைந்து காணப் படுகின்றன. அந்த வகையில் முதல் மற்றும் இரண்டாவது சீசன்களில் கோமாளியாக கலந்துகொண்ட புகழுக்கு இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பல திரைப்பட வாய்ப்புகள் வந்தன.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித்தின் வலிமை திரைப்படம் மற்றும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், அருண் விஜயின் யானை, சந்தானம் நடிப்பில் வெளிவந்த சபாபதி திரைப்படம் போன்ற பல ஹீரோக்களுடன் இணைந்து புகழ் தற்போது சினிமாவில் பிஸியாக பயணித்து வருகிறார்.
மேலும் சின்னத்திரையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி மூன்றாவது சீசனிலும் புகழ் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படத்தின் சூட்டிங் எதுவும் இல்லாத நேரத்தில் புகழ் ஊர் சுற்றி வருவார் என்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் புகழ் சேலத்தில் கிரிக்கெட் வீரர் நடராஜனை சந்தித்துள்ளார்.
மேலும் புகழுக்கு நடராஜன் வீட்டில் கறி விருந்து தடபுடலாக அளிக்கப்பட்டது.இது தொடர்பான புகைப்படங்களை புகழ் அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இந்த செய்தி தற்போது ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகின்றன. இதோ அந்த புகைப்படம்.