கன்னட பெண்ணான நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் இதனால் அவருக்கு அங்கு மார்க்கெட் அதிகரித்துள்ளதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களும் அதிகமாக இருக்கின்றனர். இருப்பினும் தெலுங்கு சினிமாவையும் தாண்டி தற்பொழுது பிற மொழிகளிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.
அந்த வகையில் தமிழில் இவர் கார்த்தியின் சுல்தான் படத்தில் நடித்து அறிமுகமானார் ஆனால் தமிழில் நடித்த முதல் படமே இவருக்கு ஒரு தோல்வி படமாக அமைய மீண்டும் சிறப்பாக கம்பேக் கொடுக்க வேண்டும் என காத்துக் கொண்டிருந்த நிலையில் விஜய்யின் வாரிசு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அந்த படத்தில் தற்போது விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
ராஷ்மிகா மந்தனா இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள எண்ணூர் பகுதிகளில் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு அடுத்தடுத்து பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் அந்த வகையில் புஷ்பா 2 படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
இது தவிர ஒரு சில படங்களிலும் அவர் கமிட் ஆகி இருக்கிறார் இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா நேற்று தினம் ஹிந்தியில் வெளியாகி இருக்கும் குட் பை என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் அதுவும் அமிதாபச்சனுடன் இணைந்து நடித்திருப்பதால் அந்த படத்தை பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருக்கிறார் இந்த படத்தின் ப்ரோமோஷன் போது சில விஷயங்களை பகிர்ந்து கொண்டு உள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது என்னவென்றால்..
குடும்பத்தினருக்கும், நண்பருக்குமே என்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை காதலில் இருந்தால் அதற்காக நிறைய நேரங்களை செலவிட வேண்டும் காதலுக்கு பொறுமை மிக அவசியம் தற்போது எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை.. எதிர்காலத்தில் எனக்கு காதல் வந்தால் அந்த தகவலை சொல்கிறேன் என்று ஓபன்னாக ராஷ்மிகா மந்தனா பேசியிருக்கிறார்.