காதலித்த பெண்ணையே கரம் பிடித்த காதல் பட பெப்சி காமெடி சிறுவன்..! நம்ம மாப்பிள்ளையும் பொண்ணும் எப்படி இருக்கிறார் பாத்தீங்களா..?

pepsi

திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பல்வேறு சிறுவர்களும் இன்று வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறி விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பல்வேறு  பிரபலமும் இன்று பிரபல நடிகர்கள் ஆகவும்  சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல்வேறு நடிகர்களும் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான். அந்தவகையில் நடிகர் பரத் நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படம்தான் காதல் இத்திரைப்படத்தை யாராலும் மறக்கவே முடியாது.

ஏனெனில் இத்திரைப்படம் முழுக்க முழுக்க காதலை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும் இத்திரைப்படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடிகை சந்தியா நடித்து இருப்பார் மேலும் இத்திரைப்படத்தில் ஒரு பைக் மெக்கானிக் ஆக நடிகர் பரத் நடித்திருப்பார்.

இவ்வாறு உருவான இந்த திரைபடத்தை நமது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் அவர்கள்தான் தயாரித்தார் மேலும் இத்திரைப்படத்தை பாலாஜி சக்திவேல் அவர்கள் தான் இயக்கியிருந்தார்.

இவ்வாறு சந்தியா தன்னுடைய  பைக்கை அடிக்கடி ரிப்பேர் செய்து கொண்டு  பரத்தை பார்க்கவாகவே அவருடைய மெக்கானிக் ஷாப்பிற்கு செல்வார் இதன் மூலமாக இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்படும் அப்பொழுது பரத்தின் மெக்கானிக் ஷாப்பில் ஒரு சிறுவன் இருப்பார்  அவனை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா.

அவர் வேறு யாரும் கிடையாது அருண் இவர் செய்த பெப்சி காமெடியை மட்டும் இந்த திரைப்படத்தில் யாராலும் மறக்க முடியாது. இவர் பரத்துடன் நடித்த காதல் திரைப்படத்திற்கு பிறகாக தளபதி விஜயுடன் கூட சிவாகாசி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருப்பார்.

pepsi.jpg-1
pepsi.jpg-1

இவர் இந்த திரைப்படத்திற்கு பிறகு  எந்தவொரு திரைப்படத்திலும் சினிமாவில் வலம் வரவில்லை அதுமட்டுமில்லாமல் இவருக்கு தகுந்தாற்போல் படவாய்ப்புகளும் ஏதும் கிடைக்காத காரணத்தினால் ஒரு சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் மட்டுமே தலைகாட்ட ஆரம்பித்தார்.

இந்நிலையில் நமது அருண் ஒரு பெண்ணை நீண்ட நாளாக காதலித்து வந்ததாகவும் தற்போது அவரை கரம் பிடித்ததாகவும் தெரியவந்துள்ளது இதன் மூலமாக அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்

arun-1