தமிழ் சினிமா உலகில் நிறைய திரைப்படங்கள் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர் தான் கீர்த்தி சுரேஷ் இவர் தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து விஜய்,சூர்யா,விக்ரம்,தனுஷ்,சிவகார்த்திகேயன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கினார்.
மேலும் கீர்த்தி சுரேஷ் தற்போது ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நயன்தாரா,குஷ்பூ,மீனா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள் இந்த திரைப்படத்தை கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.
மேலும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் உடல் எடை குறைத்து ஸ்லிம்மாக மாறிய புகைப்படங்கள் ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வந்ததை நாம் பார்த்திருப்போம்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது.அந்த புகைப்படங்களில் கீர்த்தி சுரேஷ் உடல் எடை கூடி குண்டாக மாறிவிட்டார் மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ஒரு சில ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் ஆன்ட்டி போல் தற்போது தெரிகிறார் என்று கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்.