நடிகர் அஜித்குமார் வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹெச் வினோத் உடன் கைகோர்த்து தனது 60வது திரை படத்தில் நடிப்பதற்கான வேலையை பார்த்து வருகிறார் இது இப்படி இருந்தாலும் அஜித்தின் பழைய செய்திகள் அவ்வப்போது இணையதளத்தில் வெளி வருவது வழக்கம்.
அந்த வகையில் பாலா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியிருந்த திரைப்படம் நான் கடவுள் இந்த படத்திற்காக அஜித் முடியை எல்லாம் நன்கு வளர்த்து விட்டு படத்தில் நடிக்க தயாராக இருந்தார் ஆனால் சில காரணங்களால் அஜித் அந்த படத்தில் இருந்து விலகினார். ஒரு தடவை அஜித்தை ஒரு அறைக்குள் வைத்து பாலா தாக்கினார் என்ற கதையெல்லாம் வெளி வந்தன.
ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை என பாலா கூறி முடித்தார் உண்மையில் பிரச்சனை என்ன தான் என்று மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு பிஸ்மி ஒரு பேட்டியில் கூறுகையில் நான் கடவுள் பட தயாரிப்பாளராக மதுரை அன்பு செழியன் இடம்தான் தயாரிப்பாளர் வட்டிக்கு காசு வாங்கி படம் எடுக்க அஜித்தை புக் செய்தார்.
ஆனால் அஜித் இறுதியில் நடிக்க மறுத்தார் இதனால் அஜித்தை ஒரு ஹோட்டலுக்கு வரவழைத்து மதுரை அன்பு இயக்குனர் பாலா மற்றும் இன்னும் சில தயாரிப்பாளர்கள் முன்னிலையில் தான் அஜித்தை அவமானப்படுத்தினார்கள் அதனால் தான் மதுரை அன்பு மகள் திருமண பத்திரிக்கையை கொடுக்கக்கூட அழைப்பை தரவில்லை அஜித் என பிஸ்மி தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து அஜித்தை வைத்து இரண்டு படங்களை தயாரித்த போனி கபூரை சந்தித்து அன்புச் செழியன் தனது மகள் பத்திரிக்கையை கொடுத்துள்ளார் இதோ நீங்களே பாருங்கள்.