“ரோல்ஸ் ராய்ஸ்” காருக்கான நுழைவு வரியை சரியாக கட்டிய தளபதி விஜய் – எத்தனை லட்சங்கள் தெரியுமா.?

vijay-rolls-royce
vijay-rolls-royce

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் சிறப்பான திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் அவரைப் பற்றிய செய்திகள் வெளிவருகின்றன. அதை ரசிகர்கள் வேற மாதிரி பரவுவார்கள்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் விஜய் இங்கிலாந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்த மறுத்த வழக்குப்பதிவு செய்து இருந்தார்.  செய்தியை அப்பொழுது இணையதள பக்கத்தில் பேசும் பொருளாக மாறி இருந்தது.

இந்த வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் அவரிடம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தும் படி உத்தரவிட்டது அந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இப்படி வழக்குகள் தொடர்ந்து வந்த நிலையில் அந்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்காக விஜய் தற்போது  40 லட்சம் ரூபாய் நுழைவு வரியை செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது அதன்படி முதலில் இவர் 8 லட்சம் ரூபாய் ரூபாய் பிறகு 32 லட்ச ரூபாயும் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இச்செய்தி தற்போது இணைய தளப்பக்கத்தில் தீயாய் பரவி வந்தது. இதை அறிந்த விஜய் ரசிகர்கள் எங்கள் தலைவர் மேல்முறையீடு மற்றும் வழக்குகளை தொடர்ந்தாலும் சரியான முறையில் வரியை கட்டி உள்ளார் என கூறி அந்த செய்தியை வலைதளத்தில் பரப்பி ட்ரெண்டாக்கி வருகின்றனர்.