நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் மெரினா இவ்வாறு வெளியான இத்திரைப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் அவர்கள்தான் இயக்கியிருந்தார். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்த இத்திரைப்படம் ஆனது மாபெரும் வெற்றி கண்டது.
மேலும் இத்திரைப்படத்தை தொடர்ந்து பாண்டிராஜ்க்கும் சிவகார்த்திகேயனுக்கும் ஒரு நல்ல உறவு ஏற்பட்டது இதனை தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் நம்ம வீட்டு பிள்ளை ஆகிய திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புக் கிடைத்தன.
இவ்வாறு இதன் மூலமாக பட்டிதொட்டியெங்கும் மிகவும் பிரபலமான நமது நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது மெரினா திரைப்படத்தை பற்றிய ஒரு சுவாரஸ்யமான விஷயம் வெளியாகியுள்ளது.
அதாவது இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு முன்பாக வேறு ஒரு நடிகர் நடிக்க இருந்தாராம் அவர் வேறு யாரும் கிடையாது நடிகர் ராமகிருஷ்ணன் தான் இவர் அப்போது வேறு ஒரு திரைப்படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்ததன் காரணமாக இத்திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.
ஆனால் இத்திரைப்படத்தில் இவர் மட்டும் நடித்திருந்தால் இந்த திரைப்படமானது அவருடைய வாழ்வில் ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்திருக்கும் என்று கூறியது மட்டுமல்லாமல் அதன் பிறகு அவருக்கு பாண்டிராஜ் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கொஞ்சம் கூட கிடைக்கவில்லை.
அந்த வகையில் வெற்றி என்பது ஒருவருக்கு மட்டும் உடையது கிடையாது ஏனெனில் யாருக்கு வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் கிடைக்கும்