இயக்குனர் மணிரத்தினம் உண்மை மற்றும் நாவலை தழுவி படங்களை எடுப்பதில் ரொம்பவும் கைதேர்ந்தவர். இப்பொழுது கூட பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார் அதன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது இந்த படத்தை லைக்கா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இருவரும் சேர்ந்து 500 கோடி பொருட் செலவில் தயாரித்துள்ளனர்.
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், திரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், பார்த்திபன், ஜெயராஜ், விக்ரம், பிரபு மற்றும் பல பிரபலங்கள் படத்தில் நடித்து வருகின்றன. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளிவந்து அதிர வைத்தது. 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் டீசர் எதிர்பார்த்தபடி பிரம்மாண்டமாக இல்லை என விமர்சனமும் செய்தனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் அண்மையில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்திலிருந்து பொன்னி நதி என்ற பாடல் வெளியாகியது. முதல் பாடலை வெளியிட்டுள்ளதால் இந்த பாடல் பாகுபலி படத்தில் இடம்பெற்றுள்ள மகிழ்மதி பாடல் போன்று பிரம்மாண்டமாக இருக்கும் என பலரும் கணிதனர். ஆனால் அந்த அளவிற்கு இல்லை மேலும் இதில் சில குறைகளும் இருந்ததாக கூறி பலரும் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
சோழமண்டலம் நற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் பூமியாகும் அங்கு கரிசல் நிலம் கிடையாது ஆனால் பாடல் வரிகளில் கரிசல் கடந்தது என்றோ கரிசல் தாண்டி என்றோ பாடல் வரிகள் உள்ளது. மேலும் ரசிகர்கள் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையைப் படித்து உயிரோடு உயிராய் ஒன்றியவர்கள் எல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பாட்டு பாடி இசையமைத்த ஏ ஆர் ரகுமான் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் இருவரும் தவற விட்டு உள்ளனர்.
எனவும் கூறி வருகின்றனர். மேலும் உண்மையான கதையை எடுக்க சொன்னால் வேறு ஒரு கதையை படமாக்கி வைத்திருக்கிறார்கள் யாரை ஏமாற்ற பார்க்கிறார்கள் என கூறி இப்பொழுதே பேச ஆரம்பித்து விட்டன. முதல் பாடலே இப்படி விமர்சனத்தை பெற்றுள்ளதால் லைகா நிறுவனம் தற்பொழுது அச்சத்தில் இருக்கிறதாம்.