நடிகர் சரத்குமாரின் முழு சொத்து மதிப்பு.! வீட்டுக்குள்ளேயே லிப்ட் வச்சு இவ்வளவு பிரம்மாண்டமா இருக்கே..

sarathkumar 4

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமாரின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. அதாவது தொடர்ந்து சினிமாவில் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வந்த இவர் பிறகு தற்பொழுது வயதான காரணத்தினால் குணச்சித்திர நடிகராகவும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தி வருகிறார்.

அந்த வகையில் விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான வாரிசு திரைப்படத்தில் விஜயின் அப்பாவாக நடித்த மிரட்டி இருந்தார். இந்த படத்தில் இவர் நடிப்பதற்காக 2 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி இருந்த பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திலும் நடித்திருந்தார்.

மேலும் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வரும் சரத்குமார் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டவர். அந்த வகையில் சாயாதேவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதியினர்களுக்கு வரலட்சுமி, பூஜா என்று இரு மகள்கள் பிறந்தனர். இப்படிப்பட்ட நிலையில் சரத்குமாருக்கு நடிகையின் நக்மாவுடன் ஏற்பட்ட காதலால் சாயா தேவி திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டார்.

SARATHKUMAR
SARATHKUMAR

அதன் பிறகு ராடன் நிறுவனம் தயாரித்த கோடீஸ்வரன் என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் அப்பொழுது ராடன் நிறுவனத்தின் உரிமையாளரும் நடிகையுமான ராதிகாவுடன் சரத்குமாருக்கு காதல் மலர்ந்தது எனவே இருவரும் கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் தற்பொழுது இவர் இந்த தம்பதியினர்களுக்கு ராகுல் என்ற மகன் உள்ளார்.

SARATHKUMAR 1

இவ்வாறு சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்தவரும் இவர் சுமார் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து மதிப்பை வைத்துள்ளாராம் அவரது மனைவி ராதிகா மற்றும் வரலட்சுமி ஆகியோர்களும் சினிமாவில் இருந்து வரும் நிலையில் அவர்களுடைய சொத்து மதிப்பு இல்லாமல் இவருடைய சொத்து மட்டும் 150 கோடி ரூபாய் இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

sarathkumar 2

இவ்வாறு இதனை தாண்டி சரத்குமார் கார்களின் மீது மிகவும் ஆர்வம் உடையவராம் எனவே முதலில் ஒரு fiat கார் தான் வாங்கினாராம் அதன் பிறகு pajero sport உள்ளிட்ட பல சொகுசுவர்களை வாங்கியுள்ளாராம்.. மேலும் இதனை அடுத்து சென்னை கொட்டிவாக்கத்தில் சரத்குமாருக்கு ஒரு பெரிய வீடு இருக்கிறது எனவும் அது மிகவும் பிரம்மாண்டமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது மேலும் அந்த புகைப்படங்களும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

sarathkumar 3