தமிழ் சினிமாவில் மிகவும் பல கஷ்டங்களை அனுபவித்து பல அவமானங்களை தாண்டி தற்போது மிகவும் உயர்ந்த இடத்தில் இருப்பவர் தான் யோகி பாபு அந்த வகையில் பார்த்தால் யோகி பாபு கிடைத்த சின்ன சின்ன கதாபாத்திரங்களை ஏற்று நடித்து மிகப் பெரிய காமெடி நடிகராக நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.
இவருக்கு ஒரு சில திரைப்படங்கள் நல்ல வரவேற்பு தந்ததால் தொடர்ச்சியாக பல நடிகர்களுடன் இணைந்து நடித்து மிகவும் புகழ்பெற்று விளங்கி வருகிறார். இவர் ஒருசில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் அந்த வகையில் பார்த்தால் இவர் கதாநாயகனாக நடித்த கூர்க்கா,கோலமாவு கோகிலா,மண்டேலா போன்ற பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இவர் தொடர்ச்சியாக நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார்.
மேலும் யோகிபாபு தொலைக்காட்சியில் இருந்து தான் வெள்ளித்திரைக்கு மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்து விட்டார் இதனைத்தொடர்ந்து தான் இவர் வெள்ளித்திரையில் நிறைய திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.
இந்நிலையில் யோகி பாபுவை பற்றி புதிதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது அதில் யோகி பாபு அவ்வை சண்முகி படம் முழுவதும் பெண் வேடத்தில் இருப்பதைப் போலவே இவரும் முதன் முறையாக ஒரு பெண் வேடத்தில் முழுமையாக மாறி நடிக்க போகிறாராம்.
ஆனால் இப்படி நடித்தால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் எனவும் பல பிரபலங்களும் கூறிவருகிறார்கள்.மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் கமல்ஹாசனின் கெட்டப்பை நீங்களும் எடுக்கிறீர்களா உங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.