திடீரென பழம்பெரும் பிரபலத்தை சந்திக்க ஆசைப்பட்ட நடிகர் விக்ரம்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

vikram-01
vikram-01

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருபவர் தான் நடிகர் விக்ரம். இவ்வாறு பிரபலமான  நடிகைகள் திரைப்படத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றி நடிப்பதில் வல்லவர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம்.

அந்தவகையில் இவர்  சமீபத்தில் நடித்த ஐ மற்றும் இதற்கு முன்பாகவே அந்நியன் சேது, காசி போன்ற பல்வேறு திரைப்படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பு திறனை வெளிக்காட்டி இருப்பார்.  இவ்வாறு பிரபலமான நமது நடிகர் முதன் முதலாக சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாக தான் இருந்தார் அதன் பின்னர் தான் தன்னுடைய திறமையின் மூலம் கதாநாயகனாக அவதாரம் எடுத்தார்.

அந்த வகையில் இவர் சமீபத்தில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் இத் திரைப்படமானது இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படம் ஆகும்.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் துருவ நட்சத்திரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்நிலையில் நடிகர் விக்ரம் நடப்பில் தொடர்ந்து இரண்டு திரைப்படங்கள் வெளிவர உள்ள நிலையில் தற்போது விக்ரம் ஒரு பிரபலத்தை பார்க்க ஆசைப்பட்டு உள்ளார்.

அவர் வேறு யாரும் கிடையாது பாடகி சுசீலா அவர்களை தான் ஏனெனில் நடிகர் விக்ரம் பாடகி சுசீலா அம்மாவின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது அந்தவகையில் சுசிலா அம்மாவை நேரில் சந்தித்து தன்னுடைய ஆசையை நிறைவேற்றியுள்ளார் நடிகர் விக்ரம்.

அந்த வகையில் பாடகி சுசீலா அம்மாவை சந்தித்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. என்று கூறியது மட்டுமில்லாமல் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.