ஒரு பக்கம் நயன்தாரா மற்றொரு பக்கம் சமந்தா இரண்டு பேருக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் விக்னேஷ் சிவன்..!

vignesh-shivan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா இவர்கள் இருவரும் தனித்தனியே தன்னுடைய நடிப்பு திறனை தமிழ்சினிமாவில் காட்டிக்கொண்டு வருகிறார்கள் அந்த வகையில் இவர்கள் இருவரையும் ஒன்றாக இணைத்து திரைபடத்தில் நடிக்க வைத்தவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

இவ்வாறு இந்த இரண்டு நடிகைகளும் இதுவரை ஒன்று சேராமல் நடித்து வந்த வகையில் தற்போது காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தின் மூலம் நயன்தாராவையும் சமந்தாவையும் இணைத்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க வைத்து அழகு பார்த்துள்ளார்.

இவ்வாறு வெளிவந்த செய்தியின் மூலமாக ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் இருப்பது மட்டுமல்லாமல் இந்த இரண்டு நடிகைகளையும் நமது விஜய்சேதுபதி காதலித்து  வருவது மட்டுமல்லாமல் காமெடியிலும் செம மாஸ் காட்டியுள்ளாராம்.

பொதுவாக நயன்தாரா தன்னுடைய காதலன் ஆனா விக்னேஷ் சிவனிடம் எந்த ஒரு தொல்லையும் கொடுத்தது கிடையாது ஆனால் தற்போது விக்னேஷ் சிவன் பெரும் சிக்கலில் மாட்டி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் திரைப்படத்திற்கான பூஜை கூட இரண்டு நடிகைகள் இடமும் சம்மதம் கேட்ட பிறகு தான் ஆரம்பித்தார்.

அந்தவகையில் விக்னேஷ் சிவன் மற்றும் விஜய்சேதுபதி ஆகிய இருவர்களும் ஓரளவு சினிமாவில் சாதித்தாலும் அட்லி மற்றும் ஷாருக்கான் ஆகிய இருவரும்  திரையில் பெரும் புலியாக இருந்து வருகிறார்கள் ஆகையால் இவர்களுடைய திரைப்படத்திற்கு தான் நயன்தாரா அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகை சமந்தாவும் தெலுங்கு இயக்குனர்களின் திரைப்படத்தில் தான் அதிக கவனம் செலுத்தி வருவதாக தெரிந்து அதன் காரணமாக விக்னேஷ் சிவன் கடும் கோபத்தில் இருந்து வருகிறாராம். இந்நிலையில் காதலியை  குற்றம் சொல்வதா இல்லை சமந்தாவை குற்றம் சொல்வதா என இவர்கள் இடையில் மாட்டிக்கொண்டு விக்னேஷ் சிவன் படாதபாடுபட்டு வருகிறாராம்.

ஆனால் தன்னுடைய காதலன் கஷ்டத்தை நயன்தாரா புரிந்துகொண்டு நடப்பது மட்டுமல்லாமல் சமந்தாவையும் பேசி தன் வழிக்கு கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.